Paristamil Navigation Paristamil advert login

இஸ்ரேல் - காசா போர் - 138 பத்திரிகையாளர்கள் பலி

இஸ்ரேல் - காசா போர் - 138 பத்திரிகையாளர்கள் பலி

15 ஐப்பசி 2024 செவ்வாய் 08:19 | பார்வைகள் : 2245


கடந்த 2023 ஒக்டோபர் மாதம் இஸ்ரேல் - காசா போர் ஆரம்பமாகியது. ஓராண்டில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

இஸ்ரேல்- காசா இடையிலான போரில் இதுவரை 138 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டு இருப்பதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளது.

இதில் பாலஸ்தீனத்தை சேர்ந்த 128 பத்திரிகையாளர்கள், லெபனானை சேர்ந்த 5 பேர், இஸ்ரேலை சேர்ந்த 4 பேர் , சிரியாவை சேர்ந்த ஒருவர் என 138 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

குறிப்பாக இஸ்ரேல் தாக்குதலில் தான் அதிகம் பேர் பலியானதாக இந்த விவர அறிக்கை தெரிவிக்கிறது.

இஸ்ரேலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பத்திரிகையாளர்கள் அமைப்பு, ஐ.நா., வரை கொண்டு சென்று இருக்கிறது.

பலியான பத்திரிகையாளர்கள் குடும்பத்தினருக்கு நிதி உதவி வழங்கவும் ஏற்பாடு செய்து வருகிறது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்