Paristamil Navigation Paristamil advert login

பெல்ஜியத்தின் அரச தம்பதிகள் பிரான்ஸ் விஜயம் - எலிசே மாளிகையில் விருந்து!

பெல்ஜியத்தின் அரச தம்பதிகள் பிரான்ஸ் விஜயம் - எலிசே மாளிகையில் விருந்து!

15 ஐப்பசி 2024 செவ்வாய் 07:00 | பார்வைகள் : 2035


பெல்ஜியத்தின் மன்னர் Philippe மற்றும் அவரது துணைவியார் Mathilde  ஆகிய இருவரும் மூன்று நாட்கள் சுற்றுப்பயணமாக பிரான்சுக்கு வருகை தந்துள்ளனர். 

நேற்று ஒக்டோபர் 14, திங்கட்கிழமை அவர்கள் தொடர்ந்து மூலமாக பரிசை வந்தடைந்தனர். அவர்களை வரவேற்ற ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன், நேற்று இரவு எலிசே (Élysée) மாளிகையில் வைத்து இரவு விருந்து ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தார். அதில் பெல்ஜிய அரச குடும்பத்தினருடன் ஜனாதிபதி மக்ரோன், அவரது மனைவி பிரிஜித் மக்ரோன் ஆகியோரும் கலந்துகொண்டனர். 

மூன்று நாட்கள் அவர்கள் பிரான்சில் சுற்றுப்பயணம் மேற்கொள்வார்கள் எனவும், Lille மற்றும் Chantilly ஆகிய நகரங்களுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'எங்களுடைய குடும்பம் சந்தித்துக்கொள்கிறது. அண்டை வீட்டுக்காரருடனான சந்திப்பு இது!' என அவர்களது வருகை குறித்து ஜனாதிபதி மக்ரோன் பதிவிட்டுள்ளார்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்