Paristamil Navigation Paristamil advert login

பிரான்சில் இவ்வருடம் கொட்டித்தீர்த்த மழை!!

பிரான்சில் இவ்வருடம் கொட்டித்தீர்த்த மழை!!

14 ஐப்பசி 2024 திங்கள் 16:27 | பார்வைகள் : 2195


முந்தை ஆண்டுகளை விட சராசரியாக 35% சதவீதம் அதிக மழையை இந்த 2024 ஆம் ஆண்டு சந்தித்துள்ளது. வருடம் முடிவதற்கு இன்னும் இரண்டரை மாதங்கள் உள்ள நிலையில், இந்த மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

இவ்வருடம் ஜனவரி 1 ஆம் திகதி முதல் ஒக்டோபர் 14 ஆம் திகதி வரை பிரான்சில் 831.7 மி.மீ மழை கொட்டித்தீர்த்துள்ளது. ஒரு சதுர மீற்றருக்கு 831 லிட்டர் மழை பெய்துள்ளது. இது 1997-2022 காலப்பகுதியின் சராசரியை விட 35% சதவீதம் அதிகமாகும்.

அதேவேளை, பரிசில் இந்த சராசரியை விட இவ்வருடம் 45% சதவீதம் அதிகமாக மழை பதிவாகியுள்ளது. ஒரு சதுர மீற்றருக்கு 750 லிட்டர் எனும் கணக்கில் மழை பெய்துள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்