பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரே வாரம் மட்டுமே இருந்த ரவீந்தருக்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா?
14 ஐப்பசி 2024 திங்கள் 13:39 | பார்வைகள் : 532
விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி ஒரு வாரம் ஆகிவிட்ட நிலையில், முதல் வாரத்தில் ரவீந்தர் எலிமினேஷன் செய்யப்பட்டது பார்வையாளர்களுக்கு சற்று அதிர்ச்சியாக இருந்தது.
பிக் பாஸ் வீட்டில் நுழைந்த சில நிமிடங்களிலேயே அவர் தனது ஆட்டத்தை ஆரம்பித்தார், கிட்டத்தட்ட அனைத்து போட்டியாளர்களும் அவருடைய ஆட்டத்தை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஒரே வாரத்தில், அனைத்து போட்டியாளர்களையும் அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று கணித்தது, ரஞ்சித்தை வைத்து பிராங்க் விளையாட்டு விளையாடியது உள்பட அனைத்துமே சூப்பராக இருந்தாலும், அவர் முதல் வாரத்திலேயே வெளியேற்றப்பட்டது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டில் ஒரு வாரம் மட்டுமே இருந்த ரவீந்தருக்கு சுமார் 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் சம்பளம் கிடைத்ததாக தகவல் வெளியாகியுள்ளன. தினமும் அவருக்கு 50 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டதாகவும், ஒரு வாரம் மட்டுமே இருந்த அவருக்கு இந்த தொகை கிடைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜெஃப்ரி போன்ற போட்டியாளர்களுக்கு வெறும் பத்தாயிரம் ரூபாய் மட்டுமே சம்பளம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் ஒரு மாதத்திற்கு மேல் இருந்தால் மட்டுமே இந்த தொகையை பெற முடியும் என்ற நிலையில், ஒரே வாரத்தில் பெரிய தொகையை பெற்றுக் கொண்டு ரவீந்தர் வெளியேறியுள்ளதை குறிப்பிடலாம்.