Apple iPhone பயனாளர்களுக்கு இந்திய அரசு வெளியிட்ட முக்கிய எச்சரிக்கை
12 கார்த்திகை 2024 செவ்வாய் 12:45 | பார்வைகள் : 531
இந்தியாவில் Apple சாதனங்களைப் பயன்படுத்துவோருக்கு முக்கியமான பாதுகாப்பு எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் கணினி அவசர எதிர்வினை குழு (CERT-In) தணிக்கை செய்த பாதுகாப்பு பாதிப்பு, iPhone, iPad, MacBook, Apple Watch போன்ற சாதனங்களைப் பாதிக்கக்கூடியதாக உள்ளது.
இந்த எச்சரிக்கை நவம்பர் 7, 2024 அன்று வெளியிடப்பட்டுள்ளது மற்றும் "உயர் முக்கியத்துவம்" என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த பாதுகாப்பு பாதிப்பு, iOS, iPadOS, macOS, watchOS, tvOS மற்றும் Safari போன்ற பல்வேறு ஆப்பிள் சாப்ட்வேர் பதிப்புகளில் உள்ளது.
இதனால் தரவுகள் வெளியிடுதல், சேவை முடக்கம் மற்றும் பயனர் தகவல்களை அநாவசிய அணுகல் போன்ற ஆபத்துகள் உருவாகும் எனச் சொல்லப்படுகிறது.
18.1-க்கு முந்தைய iOS மற்றும் iPadOS பதிப்புகள்
17.7.1-க்கு முந்தைய iOS மற்றும் iPadOS பதிப்புகள்
15.1-க்கு முந்தைய macOS Sequoia பதிப்புகள்
14.7.1-க்கு முந்தைய macOS Sonoma பதிப்புகள்
13.7.1-க்கு முந்தைய macOS Ventura பதிப்புகள்
11.1-க்கு முந்தைய watchOS பதிப்புகள்
18.1-க்கு முந்தைய tvOS பதிப்புகள்
2.1-க்கு முந்தைய visionOS பதிப்புகள்
18.1- க்கு முந்தைய Safari பதிப்புகள்
இந்த பாதுகாப்பு பிரச்சினைகளைத் தவிர்க்க, உங்கள் Apple சாதனத்தை புதிய பதிப்பிற்கு உடனடியாக புதுப்பிக்கும்படி CERT-In பரிந்துரைக்கிறது.
புதிய பதிப்பு உள்ளது என்பதை சரிபார்க்க, உங்கள் சாதனத்தில் Settings > General > Software Update > Check for new version என்பதை கிளிக் செய்து புதுப்பிக்கவும்.
இந்த அப்டேட் iPhone 16 முதல் பழைய iPhone X, 8, 8 Plus போன்ற மொடல்களையும் உள்ளடக்குகின்றன. Apple சாதனங்களைப் பயன்படுத்துவோர் அனைவரும் இதை மிக அவசியம் கவனிக்க வேண்டும்.