கங்குவா படத்தில் கார்த்தி?
12 கார்த்திகை 2024 செவ்வாய் 11:18 | பார்வைகள் : 665
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் சூர்யா நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கங்குவா’. வரலாற்றுப் பின்னணியில் பிரம்மாண்ட படைப்பாக உருவாகியுள்ள ‘கங்குவா’வில், இதுவரை ஏற்று நடித்திராத முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ளார். அதிக பொருட்செலவில் உருவாகியுள்ள ‘கங்குவா’ திரைப்படம், சர்வதேச அளவில் ஒரே நேரத்தில் 10 மொழிகளில் வெளியாகவுள்ளது. மேலும் சூர்யா 10 விதமான கெட்டப்புகளில் நடித்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.
இந்தப் படத்தில் நடிகர் சூர்யாவுடன் பிரபல பாலிவுட் நட்சத்திரங்கள் திஷா பதானி மற்றும் நடிகர் பாபி தியோல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
‘கங்குவா’ திரைப்படம் வரும் 14ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவித்துள்ள நிலையில் சமீபத்தில் படத்தின் ரிலீஸ் டிரெய்லரை வெளியிட்டு இருந்தார்கள். இந்த டிரெய்லரில் சூர்யாவின் மாடர்ன் போர்ஷன் காட்சிகள் இடம்பெற்றிருந்த நிலையில், டிரெய்லரில் இடம்பெற்றிருந்த ஒரு காட்சியை வைத்து கார்த்தி நடித்து இருப்பதாக ரசிகர்கள் வலைத்தளங்களில் சிலாகித்து வருகின்றனர்.
டிரெய்லரில் தங்கப் பல்லுடன் ஒரு நபர் தோன்றும் காட்சி இருக்கும். அது சூர்யாவின் தம்பி நடிகர் கார்த்தி தான் என்கின்றனர் ரசிகர்கள்.
சினிமா வட்டாரத்தில் இருந்து வரும் தகவல்களும் இதையே சொல்கின்றன. கங்குவா படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ளதாகவும், அவர் மிகவும் ஸ்பெஷலான கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
மேலும், கார்த்தி இதுவரை புகைப்பிடிக்கும் காட்சியில் நடித்தது இல்லை. அதனை ஒரு ரூல்ஸாக கார்த்தி கடைப்பிடித்து வந்தார். தற்போது அண்ணனுக்காக கங்குவா படத்தில் அந்த ரூல்ஸை மீறி சிகெரெட் பிடிக்கும் காட்சிகளிலும் நடித்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் கேரளாவில் புரொமோஷன் நிகழ்ச்சிக்கு சென்றிருந்த சூர்யாவிடம், கார்த்தியுடன் இணைந்து நடிப்பது எப்போது எனக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, ‘ஒரு சர்ப்ரைஸ் இருக்கிறது. அதனை நான் சொல்லமாட்டேன். படக்குழு விரைவில் சொல்லும்’ என்று கூறியிருந்தார்.
இந்த பேச்சையும், டிரெய்லரில் இடம்பெற்றுள்ள காட்சியையும் வைத்து பார்த்தால் “ஒருவேளை இருக்குமோ” என தோன்ற வைக்கிறது.