வடக்கு பிரான்சை சூழ்ந்துள்ள மூடுபனி!
12 கார்த்திகை 2024 செவ்வாய் 07:06 | பார்வைகள் : 2469
பிரான்சின் வடக்குப் பகுதியை கடந்த பத்து நாட்களாக மூடுபனி சூழ்ந்துள்ளது. சூரிய ஒளி படாமல் நாட்கள் நகர்வதாக வானிலை அவதானிப்பு மையம் அறிவித்துள்ளது.
குறிப்பாகப்பாக Rennes மாவட்டத்தில் மாவட்டத்தில் கடந்த ஒக்டோபர் 31 ஆம் திகதி முதல் நவம்பர் 10 ஆம் திகதி வரையான பத்து நாட்களில் ஒரு விநாடி கூட சூரிய ஒளி படாமல்வானம் தெரியாமல் பனி மூடி இருப்பதாகவும், திரும்பும் இடமெல்லாம் சாம்பல் காடுகளாக காட்சியளிப்பதாகவும் வானிலை அவதானிப்பு மையம் அறிவித்துள்ளது.
1956 ஆம் ஆண்டின் பின்னர் இச்சம்பவம் Rennes மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளதாக வானிலை அவதானிப்பு மையம் அறிவித்துள்ளது. அங்கு தற்போது போதுமான காற்றின் வேகம் இல்லாமல் மூடுபனி படர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.