மூன்று பிரபல இயக்குனர்களுடன் இணையும் பிரதீப் ரங்கநாதன்
11 கார்த்திகை 2024 திங்கள் 07:24 | பார்வைகள் : 736
பிரதீப் ரங்கநாதன் நடித்துக் கொண்டிருக்கும் அடுத்த திரைப்படத்தில் மூன்று பிரபல இயக்குனர்கள் முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
'ஓ மை கடவுளே' என்ற படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகி வரும் 'டிராகன்' என்ற திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்து வருகிறார் என்பதும், இந்த படத்தில் நாயகியாக மமீதா பாஜூ நடித்து வருகிறார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.
இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த அக்டோபர் மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இந்த வட்டத்தில் மூன்று பிரபல இயக்குனர்கள் அதாவது மிஷ்கின், கே.எஸ். ரவிக்குமார் மற்றும் கௌதம் மேனன் ஆகியோர் இணைந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை அர்ச்சனா கல்பாத்தி தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ள நிலையில், இந்த படத்தின் எதிர்பார்ப்பும் அதிகரித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்திற்கு லியோ ஜோன்ஸ் இசையமைத்து வருகிறார்இந்த படத்தை முடித்தவுடன் அஸ்வத் மாரிமுத்து அடுத்ததாக சிம்பு படத்தை இயக்க இருக்கிறார் என்பதும், இந்த படம் பற்றிய அறிவிப்பு சமீபத்தில் வெளியானது