அலட்சியம் கூடாது; அறிவுறுத்தினார் முதல்வர்!
10 கார்த்திகை 2024 ஞாயிறு 05:27 | பார்வைகள் : 657
லோக்சபா தேர்தலைப் போல் சட்டசபை தேர்தலிலும் வெற்றி பெறுவோம் என்ற அலட்சியமாக இருக்கக்கூடாது,'' என தி.மு.க., நிர்வாகிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை வழங்கி உள்ளார்.
முதல்வர் ஸ்டாலின், கள ஆய்வுக்காக இரண்டு நாள் பயணமாக விருதுநகர் சென்றுள்ளார். அங்கு பட்டாசு ஆலைகளிலும், சூலக்கரை பகுதியில் உள்ள காப்பகத்திலும் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து தி.மு.க., நிர்வாகிகளுடன் கட்சிப்பணிகள் மற்றும் சட்டசபை தேர்தல் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.
அப்போது ஸ்டாலின் பேசியதாவது: லோக்சபா தேர்தலைப் போல் சட்டசபை தேர்தலிலும் வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம் என நினைத்துக் கொண்டு அலட்சியமாகவும், மெத்தனமாகவும் இருக்கக்கூடாது. அரசின் திட்டங்களால் ஒவ்வொரு குடும்பமும் ஏதோ ஒரு வகையில் பயன்பெற்றுள்ளது. மக்கள் இதை உணரும்படி பிரசாரம் இருக்க வேண்டும். ஒவ்வொரு பெண் வாக்காளரையும் சந்தித்து திட்டங்களை விளக்க வேண்டும். ஏழாவது முறையாக தி.மு.க., ஆட்சி அமைய வேண்டும். விருதுநகரில் அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க., கூட்டணி வெற்றி பெற வேண்டும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.