Paristamil Navigation Paristamil advert login

நெதர்லாந்தில் இஸ்ரேலிய ஆதரவாளர்கள் மீது தாக்குதல்

நெதர்லாந்தில் இஸ்ரேலிய ஆதரவாளர்கள் மீது தாக்குதல்

9 கார்த்திகை 2024 சனி 13:33 | பார்வைகள் : 1087


நெதர்லாந்து தலைநகர் Amsterdamல் இடம்பெற்ற உதைப்பந்தாட்ட போட்டி ஒன்றில் இஸ்ரேலிய ஆதரவாளர்கள் மீது தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இந்த தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் குறித்த தாக்குதலுக்கு ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் கண்டனம் தெரிவித்துள்ளார். 

”யூத மதத்துக்கு மீதான மிகப்பெரிய தாக்குதல்!” என இதனை நெதர்லாந்து பிரதமர் Dick Schoof தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இது தொடர்பில் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தெரிவிக்கையில், "வரலாற்றில் மிகவும் அவமானகரமான மணிநேரங்கள் அவை! மிகவும் கடுமையான கண்டனங்கள்  என தெரிவித்தார்.

அதேவேளை தாக்குதலை அடுத்து 63 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அங்கு தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்