பாகிஸ்தானில் ரெயில் நிலையத்தில் பயங்கர குண்டுவெடிப்பு - 25 பேர் பலி
9 கார்த்திகை 2024 சனி 13:19 | பார்வைகள் : 946
பாகிஸ்தானில் குவாட்டா நகரிலிருந்து , பெசாவர் நகருக்கு செல்லவிருந்தவேளையிலேயே புகையிரதநிலையத்தில் குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளது.
இந்த குண்டுவெடிப்பில் 25 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
அதேவேளை பலோச்சிஸ்தான் விடுதலை இராணுவம் என்ற அமைப்பு இந்த தாக்குதலிற்கு உரிமை கோரியுள்ளது.
ஆறு முதல் எட்டு கிலோ வெடிமருந்தினை பயன்படுத்தி தற்கொலை தாக்குதல் இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக் குழுவினர் தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
பாகிஸ்தானில் சுதந்திரம் மற்றும் வளங்களிற்கான போராட்டம் இடம்பெறும் இந்த பகுதியில் வன்முறைகள் தொடர்ந்து இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.