தி.மு.க. கூட்டணியை உடைக்க முடியாது! ப.சிதம்பரம்
9 கார்த்திகை 2024 சனி 03:09 | பார்வைகள் : 738
தி.மு.க., கூட்டணி வலிமையாக உள்ளது. யாரும் கலைக்க முடியாது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் திட்டவட்டமாக கூறி உள்ளார்.
காரைக்குடி அருகே புதுவயலில் காங்கிரஸ் அலுவலக திறப்பு விழா நடைபெற்றது. இதில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கலந்து கொண்டார்.
பின்னர் நிருபர்களிடம் பேசுகையில் அவர் கூறியதாவது; 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் ஸ்டாலின் தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும். ஒரே நாடு ஒரே தேர்தல் தீர்மானத்தை நிறைவேற்ற அரசியல் சட்டத்தை திருத்த வேண்டும்.
லோக்சபா, ராஜ்ய சபாவில் தீர்மானத்தை நிறைவேற்ற போதுமான பெரும்பான்மை பா.ஜ.,வுக்கு கிடையாது. ஒரே நாடு ஒரே தேர்தல் சட்ட மசோதாவை பா.ஜ., கொண்டு வந்தால் தோற்கடிப்போம். ஒரே நாடு ஒரே தேர்தல் நடைபெறாது.இவ்வாறு ப. சிதம்பரம் கூறி உள்ளார்.