இலங்கையில் 1,000 கோடி ரூபாய் மோசடி செய்த தம்பதிகளுக்கு விளக்கமறியல்
8 கார்த்திகை 2024 வெள்ளி 15:31 | பார்வைகள் : 1499
குருநாகலையில் பிரமிட் நிதி நிறுவனத்தை நடத்தி வைப்பாளர்களிடம் சுமார் 1000 கோடி ரூபாவை மோசடி செய்த குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்ட தம்பதிகள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
நாட்டை விட்டு தப்பிச் சென்ற நிறுவனத்தின் உரிமையாளர், நிதி நிறுவனத்தின் பணிப்பாளராக இருந்த அவரது மனைவி, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து, இன்று (08) கைது செய்யப்பட்டனர்.
கைதுசெய்யப்பட்டவர்களை கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே முன்னிலையில் ஆஜர்படுத்திய போது, எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.