உங்களுடைய Smart Phone Hang ஆகாமல் இருக்க சில டிப்ஸ்...
8 கார்த்திகை 2024 வெள்ளி 14:49 | பார்வைகள் : 561
உங்களுடைய ஸ்மார்ட்போன் ஹேங் ஆகாமல் இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
தற்போதைய காலத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடம் ஸ்மார்ட்போன் இருக்கிறது. உலகில் ஒரு முக்கியமான சாதனமாகவே ஸ்மார்ட்போன் மாறிவிட்டது.
அந்தவகையில் ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களும் வாடிக்கையாளர்களை கவர வேண்டும் என்பதற்காக வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்பத்தில் புதுவித அப்டேட்டுகளை கொண்டு வந்து புதிய மொடல்களை அறிமுகப்படுத்தி வருகின்றன.
மேலும், ஸ்மார்ட்போனின் தரம் மற்றும் மொடலுக்கு ஏற்ப 2 முதல் 5 ஆண்டுகள் என்ற கால அளவில் மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் ஸ்டோரேஜ் பற்றாக்குறை தான். இதனால், ஸ்மார்ட்போன் ஹேங் ஆகி மாற்ற வேண்டிய நிலை ஏற்படும்.
* முதலில் நாம் ஸ்மார்ட்போன் நிறுவனம் அனுப்பும் அப்டேட்டுகளை அவ்வப்போது ஸ்மார்ட் போனில் இன்ஸ்டால் செய்வது முக்கியமான ஒன்றாகும். இதனால், உங்களுடைய போனின் ரேம் மற்றும் சேமிப்பக திறனை மேம்படுத்த முடியும்.
* உங்களுடைய போனில் சேமித்து வைத்திருக்கும் புகைப்படங்கள், வீடியோக்கள் ஆகியவற்றை தனியாக ஹார்ட் டிஸ்க் போன்றவற்றில் சேமித்து வையுங்கள்.
பின்னர் அவற்றை போனில் இருந்து அழித்து விடுங்கள். இதனால், போன் ஹேங் ஆகாமல் சிறப்பாக வேலை செய்யும்.
* அடுத்ததாக, மின்னணு பொருட்கள், எலக்ட்ரானிக் மற்றும் காந்த புலன்களுடன் அதிக அளவில் உங்களுடைய போன் தொடர்பு கொள்ளாமல் இருக்குமாறு வையுங்கள்.
ஏனென்றால், அவை உங்களுடைய போனை சேதப்படுத்தும். இந்த விடயத்தில் மிகவும் கவனமுடன் செயல்படுங்கள்.
* இரவு முழுவதும் உங்களுடைய போனை சார்ஜ் செய்வதை தவிர்த்து விடுங்கள். 80 சதவீதம் அல்லது 90 சதவீதம் சார்ஜ் ஆனவுடன் எடுத்து விட வேண்டும்.
100 சதவீதம் சார்ஜ் செய்வதை தவிர்த்து விடுங்கள். அதேபோல், 20 சதவீதத்திற்க்கும் கீழே செல்லாமல் பார்த்து கொள்ளுங்கள்.