Paristamil Navigation Paristamil advert login

மருத்துவமனையில் நெருக்கடிகள் அதிகரித்து வருகிறது.

மருத்துவமனையில் நெருக்கடிகள் அதிகரித்து வருகிறது.

2 கார்த்திகை 2024 சனி 08:07 | பார்வைகள் : 2584


கடந்த 2013 முதல் 2023 வரையான பத்து ஆண்டுகளில் பிரான்ஸ் முழுவதும் ஏற்ப்பட்டுள்ள மருத்துவர்கள் பற்றாக்குறை, போதியளவு நிதி ஒதுக்கப்படாமை, மற்றும் தாதியர், மருத்துவ உதவியாளர் பற்றாக்குறை காரணமாக பெரும் மருத்துவமனைகள், சிறிய மருத்துவமனைகள் உட்பட மொத்த மருத்துவமனைகளில் 43,500 படுக்கைகள் அகற்றப்பட்டுள்ளது என நேற்று வெளியான அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.

2023ம் ஆண்டில் மட்டும்  4,900 படுக்கைகளை மருத்துவ மனைகள் இழந்துள்ளன. அதேபோல் சிறிய நகரங்களில் வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் மருத்துவமனைகள் தங்களின் இரவு நேர சேவைகளை 'service urgence' மூடி விடுவதும் நடைமுறைக்கு வந்துள்ளன. இவை அரச மருத்துவமனைகள் மட்டுமன்றி தனியார் மருத்துவமனைகளிலும் நடைபெறுவதாக குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலை மிகவும் ஆபத்தானது எனவும் சாதாரணமாக மரணங்கள் ஏற்பட இவை வழி வகுக்கும் அதே வேளையில் பல தொற்று நோய்கள் நாடு முழுவதும் பரவுவதற்கு காரணமாக இவைகள் அமையும் எனவும் மருத்துவ வட்டாரங்கள் கவலை தெரிவித்துள்ளன.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்