இஸ்ரேலை தாக்கிய ஹிஸ்புல்லா ஏவுகணைகள் - 5 பேர் பலி
1 கார்த்திகை 2024 வெள்ளி 13:35 | பார்வைகள் : 2305
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்புக்கு எதிரான போர் ஒரு வருடத்தை கடந்து தீவிரமடைந்து வருகின்றது.
இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட திடீர் ராக்கெட் தாக்குதலில் 5 பேர் வரை கொல்லப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
வடக்கு இஸ்ரேலிய பகுதிகள் மீது ஹிஸ்புல்லாவின் ராக்கெட் தாக்குதல் நடந்து இருப்பதாக இஸ்ரேல் ஊடகங்கள் தெரிவித்துள்ளது.
இதில் 4 வெளிநாட்டு பயணிகள் உட்பட குறைந்தது 5 பேர் உயிரிழந்து இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராக்கெட் தாக்குதலை உறுதிப்படுத்தியுள்ள இஸ்ரேலிய பாதுகாப்பு படை, இரண்டு ராக்கெட்டுகள் இஸ்ரேல்-லெபானின் எல்லை நகரமான மெட்டுலாவில் இருந்த விவசாய தொழிலாளர்களை தாக்கியதாக தெரிவித்துள்ளது.
போர் நிறுத்த பேச்சுவார்த்தைகள் கத்தாரில் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், இஸ்ரேல், ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா படையினருக்கு இடையிலான மோதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.