Paristamil Navigation Paristamil advert login

புதிய மாதம் - புதிய மாற்றங்கள்!

புதிய மாதம் - புதிய மாற்றங்கள்!

1 கார்த்திகை 2024 வெள்ளி 11:00 | பார்வைகள் : 5016


இன்று நவம்பர் 1 ஆம் திகதி புதிய மாதத்தில் பல புதிய மாறுதல்கள் பதிவாகின்றன. அவற்றை தொகுத்து தருகிறது இந்தச் செய்தி.

அடிப்படைச் சம்பளம் அதிகரிப்பு!



இன்று முதல் அடிப்படைச் சம்பளம் (smic ) 2% சதவீதத்தால் அதிகரிக்கிறது. வாரத்துக்கு 35 மணிநேரங்கள் பணிபுரியும் ஒருவருக்காக அடிப்படைச் சம்பளம் 1,766.92 யூரோக்களில் இருந்து 11.88 யூரோக்களால் அதிகரித்து 1,801.80 யூரோக்களாக அதிகரிக்கிறது.

இந்த அடிப்படைச் சம்பளம் 2025 ஆம் ஆண்டு ஜனவரியுடன் தானியங்கி முறையில் பணவீக்கத்துக்கு ஏற்றது போல் மாற்றுதலுக்கு உள்ளாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

கட்டாயமாக்கப்படும் குளிர்கால டயர்கள்!



மகிழுந்துகளிலும், வாகங்களிலும் குளிர்காலத்துக்கு ஏற்றது போல் உள்ள M+S டயர்களை பயன்படுத்துவது இன்று முதல் கட்டாயமானதாகும். நாட்டின் 32 மாவட்டங்களுக்கு இந்த அறிவுத்தல் வழங்கப்பட்டுள்ளது. அம்மாவட்டங்களில் வசிப்பவர்கள், பிறமாவட்டங்களில் இருந்து அங்கு செல்பவர்கள் அனைவரும் இவ்வகை டயர்களை பொருத்துவது அவசியமானதாகும்.

புகையிலை பாவனை இல்லாத மாதம்!



இந்த நவம்பரானது புகையிலை பழத்தை கைவிடுவதற்குரிய (mois sans tabac) மாதமாகும். அதற்காக பிரச்சாரங்கள் பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களினால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த புகையிலை இல்லா மாதத்தினை பழகிக்கொண்டால், புகையிலைப் பழக்கத்தை அடியோடு நிறுத்திவிடலாம் எனும் நம்பிக்கை தருகிறது இந்த மாதம்.

39 89 எனும் இலவச தொலைபேசி இலக்கத்தினூடாக தொடர்புகொண்டு, இது தொடர்பான நிபுணர்களுடன் உரையாடி தெளிவு பெற முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

trêve hivernale!



வாடகை செலுத்தப்படவில்லை எனும் காரணத்துக்காக வாடகை வீடுகளில் வசிப்பவர்களை வெளியேற்ற முடியாது எனும் சட்டம் இன்று நவம்பர் 1 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வருகிறது.

இது குறித்த விரிவான தகவல்களை <<இங்கே>> படிக்க முடியும்.
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்