இலங்கையில் எரிபொருள் விலையில் மாற்றம்!
31 ஐப்பசி 2024 வியாழன் 14:52 | பார்வைகள் : 1062
இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம் எரிபொருட்களின் விலையைக் குறைக்கவுள்ளது.
இதன்படி, இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம், ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலையை 6 ரூபாவினால் குறைத்து 371 ரூபாவாக நிர்ணயித்துள்ளது.
அத்துடன், சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 6 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, அதன் புதிய விலை 313 ரூபாவாகும்.
ஒக்டேன் 92 ரக பெற்றோலின் விலை 311 ரூபாய் என்ற விலையிலேயே மாற்றமின்றி தொடரும் எனவும் இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
அதேநேரம், ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 283 ரூபாய் என்ற விலையில் மாற்றமின்றி தொடர இலங்கை இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.
அத்துடன் மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 183 ரூபாய் என்ற விலையில் மாற்றமின்றி தொடர இலங்கை இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.