Google Gemini AI, Gmail இல் அறிமுகம்! சிரமம் இல்லாமல் கடிதங்கள் எழுதுங்கள்!
30 ஐப்பசி 2024 புதன் 10:16 | பார்வைகள் : 762
Google இன் Gemini AI, Gmail இல் அறிமுகம் செய்யப்படுகிறது.
Google இன் Gemini AI, இப்போது Gmail இன் வலைப் பதிப்பிலும் கிடைக்கிறது.
இதன் மூலம், மின்னஞ்சல்களை எழுதுவதையும் திருத்துவதையும் எளிதாக்கும் புதிய அம்சத்தை அறிமுகம் செய்கிறது.
அதாவது முன்னதாக, மொபைல் பயனர்களுக்கு மட்டுமே கிடைத்திருந்த "Help me write" அம்சம், இப்போது வலைப் பயனர்களுக்கும் கிடைக்கிறது.
இதன் மூலம், பயனர்கள் AI உதவியுடன் மின்னஞ்சல்களை எழுதலாம் அல்லது திருத்தலாம்.
எவ்வாறு பெறுவது? இந்த அம்சத்தைப் பயன்படுத்த, பயனர்கள் Google One AI Premium-க்கு சந்தா செய்ய வேண்டும் அல்லது Workspace-க்கு Gemini add-on-ஐ வாங்க வேண்டும். இதனால் புதிய மின்னஞ்சல் எழுதும் போது, AI உதவியைப் பயன்படுத்தும்படி கேட்கும் ஒரு குறிப்பு தோன்றும்.
மேலும் இது AI, ஆரம்ப மின்னஞ்சல் வரைவுகளை உருவாக்குவதோடு, அதை அதிகாரப்பூர்வமாக மாற்றுதல், விரிவாக்குதல் அல்லது சுருக்குதல் போன்ற பரிந்துரைகளையும் வழங்கும்.
Gmail இன் வலைப் பதிப்பில், "polish" என்ற புதிய குறுக்குவழியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
12 வார்த்தைகளுக்கு மேலான மின்னஞ்சல்களை விரைவாக திருத்த, இந்த குறுக்குவழியை (கிளிக் செய்தல் அல்லது Ctrl+H) பயன்படுத்தலாம். மொபைல் சாதனங்களில், "Refine my draft" என்ற குறுக்குவழி மற்றும் "polish" என்ற குறுக்குவழியால் மாற்றப்படும்.
இதன் மூலம், திருத்தும் செயல்முறை எளிமைப்படுத்தப்படும். மேலும் பயனர்கள், Google இன் பிற AI திருத்தும் கருவிகளைப் பயன்படுத்தி தங்கள் செய்திகளை மேலும் தனிப்பயனாக்கலாம்.
Google-லின், "Help me write" அம்சத்தை வலைப் பதிப்பில் மற்றும் புதிய "polish" குறுக்குவழியை படிப்படியாக அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.