வேட்டையன் பாடல் - சர்ப்ரைஸ் அப்டேட் கொடுத்த அனிருத்!
18 புரட்டாசி 2024 புதன் 16:17 | பார்வைகள் : 681
ஜெய் பீம்' இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ளார்.இந்த படத்தில் ரஜினிகாந்த் உடன் அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.இந்த படம் ஒக்டோபர் 10 ஆம் திகதி வெளியாகவுள்ளது.படத்தின் முதல் பாடல் "மனசிலாயோ" சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
முதல் பாடலைத் தொடர்ந்து இந்த படத்தின் அடுத்த பாடல் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.இது குறித்து இப்படத்தின் இசையமைப்பாளர் அனிருத் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், வேட்டையன் படத்தின் ஹண்டர் வண்டார் பாடல் நாளை மறுநாள் வெளியாகும் என்று குறிப்பிட்டு, பாடலின் ப்ரோமோ காணொளியைப் பகிர்ந்துள்ளார்.
வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா செப்டம்பர் 20 ஆம் திகதி சென்னையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.