15 நிமிடங்களில் இருக்கையை பிடிக்க வேண்டும்.. SNCF கொண்டுவரும் புதிய கட்டுப்பாடு!!
18 புரட்டாசி 2024 புதன் 14:22 | பார்வைகள் : 2745
தொடருந்தில் பயணிக்கும் போது, முதல் 15 நிமிடங்களுக்குள்ளாக உங்களது இருக்கைகளில் அமர்ந்துவிடவேண்டும். அல்லாதுவிடில் பயணி வருகை தரவில்லை என கருதப்பட்டு அந்த இருக்கை வேறு ஒருவருக்கு வழங்கப்படும் எனும் புதிய கட்டுப்பாடு ஒன்றை SNCF அறிவித்துள்ளது.
TGV மற்றும் Intercités ஆகிய நெடுந்தூர தொடருந்துகளுக்கு இந்த கட்டுப்பாடு அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடருந்து ஆசனங்களை முன்பதிவு செய்யப்படும் போது, நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகளில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டும் எனவும், தொடருந்து புறப்பட ஆரம்பித்த முதல் 15 நிமிடங்களில் உரிய ஆசனங்களில் அமர்வது கட்டாயமானதாகும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், இந்த நிபந்தனையை ஏற்றுக்கொண்டதன் பின்னரே பயணச்சிட்டையை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.