உணர்வெழுச்சியை உரமாக்கி வெற்றிச் சரிதம் படைப்போம்.. - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
18 புரட்டாசி 2024 புதன் 06:04 | பார்வைகள் : 744
முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
வள்ளுவ முனை முதல் தலைநகர் சென்னை வரை இனமான உணர்வால் ஓருயிராய் வாழும் உடன்பிறப்புகளின் சங்கமமானது அண்ணா சாலை ஒய்.எம்.சி.ஏ. திடல்!
அமெரிக்கப் பயணத்துக்குப் பின் உடன்பிறப்புகளின் முகங்களை ஒருசேரக் கண்டு உற்சாகம் பெற்றேன்!
நமது உயிர்நாடிக் கொள்கைகளில் ஒன்றான மாநில சுயாட்சிக் கொள்கையை வென்றெடுக்கவும் - வரலாறு காணாத வெற்றியை 2026 தேர்தலில் பெற்றிடவும் இந்த முப்பெரும்_விழா-வின் உணர்வெழுச்சியை உரமாக்கி வெற்றிச் சரிதம் படைப்போம்!
தத்தமது ஊர்களுக்குத் திரும்பிடும் உடன்பிறப்புகள் பாதுகாப்பான பயணத்தை மேற்கொண்டு வீடு சேர வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.