Paristamil Navigation Paristamil advert login

விடுமுறை பற்றுச்சீட்டுக்களை பெற்றுக்கொள்வதில் நிபந்தனை விதிக்கும் SNCF!

விடுமுறை பற்றுச்சீட்டுக்களை பெற்றுக்கொள்வதில் நிபந்தனை விதிக்கும் SNCF!

17 புரட்டாசி 2024 செவ்வாய் 17:37 | பார்வைகள் : 2711


பல நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு விடுமுறை காலத்தில் இலவச பயணசிட்டைகளை அல்லது கட்டக்கழிவுடன் கூடிய வவுச்சர்களை (chèques vacances) வழங்கி வருகிறது. அவற்றை SNCF தொடருந்துகளில் பயன்படுத்தி பயணிக்க முடியும். இந்த வவுச்சர்களை ஏற்றுக்கொள்வதில் SNCF தற்போது புதிய நிபந்தனை ஒன்றை அறிவித்துள்ளது.

அதன்படி காகிதத்தில் அச்சிடப்பட்ட வவுச்சர்களை இனிமேல் SNCF ஏற்றுக்கொள்ளாது எனவும், அதற்கு பதிலாக மின்னனு முறையிலான (டிஜிட்டல்) பற்றுச்சீட்டுக்களை மாத்திரமே நிறுவனம் ஏற்றுக்கொள்ளும் எனவும், 2025, ஜனவரி 1 ஆம் திகதி முதல் இந்த கட்டுப்பாடு நடைமுறைக்கு வரும் எனவும் அறிவித்துள்ளது.

”இது முழுக்க முழுக்க காகித பயன்பாட்டை குறைக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ளது” என SNCF Voyageurs நிறுவன ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதுபோன்று விடுமுறைகால வவுச்சர்களை SNCF இடம் இருந்து வாங்கி, நிறுவனங்களுக்கு விற்பனை செய்யும் l'Agence nationale pour les Chèques-Vacances நிறுவனம் தங்களது கொள்வனவில் 55% சதவீதமானவற்றை மின்னனு முறையிலேயே பெற்றுக்கொள்கிறது எனவும், மீதமிருக்கும் 45% சதவீத பயன்பாட்டையும் இல்லாமல் செய்வதே நோக்கம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்