உளியும் நீயே, உதயமும் நீயே
17 புரட்டாசி 2024 செவ்வாய் 11:16 | பார்வைகள் : 518
பெண்ணே !
உன்னை நீயே
செதுக்கிக் கொள்...
உளி கொண்டல்ல
வலி கொண்டு...!
உடனிருப்பவர் எவரும்
தோள் கொடுப்பார்
தூக்கி விடுவார்
என்றெண்ணி உன்
கனவுகள் சிதைக்காதே...!
பழி சொல்லும்
உலகமடி...
வழி கேட்டு
நில்லாதே...!
இவர்கள் இப்படித்தானென்று
ஓரிரு துளி
விழிநீர் விட்டெறிந்துவிட்டு
எழுந்து நில்...
துணிந்து செல்...!
பரந்த இவ்வுலகில்
உனக்கான கதவுகள்
எங்கோ திறந்திருக்கும்...!