கியூபாவில் பாரியளவிலான தண்ணீர் தட்டுப்பாடு
15 புரட்டாசி 2024 ஞாயிறு 03:21 | பார்வைகள் : 1505
கியூபாவின் தலைநகர் உள்ளிட்ட பல பகுதிகளில் உணவு, தண்ணீர் மற்றும் எரிபொருள் என்பவற்றுக்குத் தட்டுப்பாடு நிலவி வருவதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதன்காரணமாகவே அங்குத் தண்ணீருக்குத் தட்டுப்பாடு நிலவி வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், குறித்த பகுதிகளில் 30ஆயிரத்துக்கும் அதிகமானோர் தினமும் தண்ணீர் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள கியூபா, தற்போது நிலவும் தண்ணீர் பற்றாக்குறை பாரிய சவாலாக மாறியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
அங்கு எரிபொருளுக்கும் தட்டுப்பாடு நிலவுவதனால் நகரங்களுக்கிடையே நீரைக் கொண்டு செல்வது பாரிய பிரச்சினையாக மாறியுள்ளதாகக் கியூபா அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.