Paristamil Navigation Paristamil advert login

பரிஸ் : நகைக்கடைக்காரரை தாக்கி நகை பறிப்பு.. €300,000 பெறுமதியான நகைகள் கொள்ளை..!

பரிஸ் : நகைக்கடைக்காரரை தாக்கி நகை பறிப்பு.. €300,000 பெறுமதியான நகைகள் கொள்ளை..!

15 புரட்டாசி 2024 ஞாயிறு 07:00 | பார்வைகள் : 3050


நகை விற்பனை செய்யும் கடைக்காரர் ஒருவரை தாக்கி அவரிடம் இருந்து €300,000 பெறுமதியுடைய நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன.

பரிஸ் 1 ஆம் வட்டாரத்தின் Place Vendôme பகுதியில் வைத்து இச்சம்பவம் நேற்று செப்டம்பர் 14, சனிக்கிழமை மாலை 6 மணி அளவில் இடம்பெற்றுள்ளது. Place du Marché-Saint-Honoré பகுதியில் அமைந்துள்ள Avani நகைக்கடை உரிமையாளர், சில பெறுமதிவாய்ந்த நகைகளுடன் கடையில் இருந்து வெளியேறி நடந்து சென்றுள்ளார். அவரை பின் தொடர்ந்த இருவர், குறித்த நகரை தாக்கி அவரிடம் இருந்த நகைப்பையை திருடிக்கொண்டு சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

கொள்ளையிடப்பட்ட நகையின் பெறுமதி €400,000 யூரோக்கள் என தெரிவிக்கப்படுகிறது. தப்பியோடிய கொள்ளையர்கள் தேடப்பட்டு வருகின்றனர்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்