ஈஃபிள் கோபுரத்தில் இருந்து அகற்றப்பட்ட ஒலிம்பிக் வளையங்கள்..!!
14 புரட்டாசி 2024 சனி 15:29 | பார்வைகள் : 2420
ஈஃபிள் கோபுரத்தில் இருந்து ஒலிம்பிக் வளையங்கள் அகற்றப்பட்டுள்ளன. அங்கு எடை குறைந்த வேறு ஒலிம்பிக் வளையங்கள் விரைவில் அமைக்கப்பட உள்ளன.
இன்று செப்டம்பர் 14 ஆம் திகதி சனிக்கிழமை இந்த வளையங்கள் அகற்றப்பட்டன. பின்னர் அவை Pont d'Iéna மேம்பாலத்தில் பொருத்தப்பட்டுள்ளன. இந்த முடிவு முன்னரே அறிவிக்கப்பட்டிருந்தது. அது இன்று செயற்படுத்தப்பட்டது.
அதேவேளை, பரிஸ் நகரசபையும் ஒலிம்பிம் குழுவும் இணைந்து எடை குறைந்த ஒலிம்பிக் வளையங்கள் ஒன்றை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக அறிய முடிகிறது. அவை ஈஃபிள் கோபுரத்தில் நிறுவப்பட உள்ளன.