'கங்குவா' ரிலீஸ் தேதி இதுவா?
14 புரட்டாசி 2024 சனி 14:20 | பார்வைகள் : 1049
சூர்யா நடித்த ‘கங்குவா’ திரைப்படம் அக்டோபர் 10ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதே தேதியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’வேட்டையன்’ திரைப்படம் வெளியாவதால் ‘கங்குவா’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி போய் இருப்பதாக கூறப்படுகிறது.
அதற்கேற்ற வகையில் எந்த ஒரு ப்ரமோஷன் பணியும் தொடங்கவில்லை என்பதும் ’வேட்டையன்’ படத்தின் பிரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ‘கங்குவா’ திரைப்படத்தை நவம்பர் மாதம் வெளியிட படக்குழுவினர் திட்டமிடப்பட்டு இருப்பதாகவும் குறிப்பாக நவம்பர் 14ஆம் தேதி இந்த படத்தை வெளியிட அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து அதிகார உருவ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சூர்யாவின் திரையுலக வாழ்வில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான படம் ‘கங்குவா’ என்பதால் இந்த படத்தை போட்டியின்றி சோலோவாக ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் அப்போதுதான் அதிக திரையரங்குகள் கிடைக்கும் என்று முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவேதான் நவம்பர் 14ஆம் தேதியை படக்குழுவினர் முடிவு செய்திருப்பதாக கூறப்படும் நிலையில், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்.
சூர்யா, திஷா பதானி, பாபி தியோல், நட்டி, ஜெகபதி பாபு, யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த்ராஜ், ஜி மாரிமுத்து, தீபா வெங்கட் மற்றும் கேஎஸ் ரவிகுமார் உள்பட பலர் நடித்துள்ளனர். தேவிஸ்ரீ பிரசாத் இசையில், வெற்றி பழனிசாமி ஒளிப்பதிவில், நிஷாத் யூசுப் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படம் சுமார் 350 கோடி செலவில் உருவாகியுள்ளது.