இலங்கையில் வாக்காளர் அட்டை விநியோகம் இன்றுடன் நிறைவு!
14 புரட்டாசி 2024 சனி 10:20 | பார்வைகள் : 446
உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை வீடுகளுக்கே சென்று விநியோகிக்கும் பணிகள் இன்றுடன் நிறைவு செய்யப்படுவதாக அஞ்சல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, வாக்காளர் அட்டை கிடைக்காதவர்கள் தங்களது பகுதிகளுக்கு உட்பட்ட அஞ்சல் அலுவலகத்துக்குச் சென்று ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தி வாக்காளர் அட்டையைப் பெற முடியும் என பிரதி அஞ்சல்மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்.
அதேநேரம் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்குத் தகுதி பெற்றுள்ளவர்களில் 98 சதவீதமானோர் வாக்களித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.