வயதில் மூத்த பெண்களை ஆண்கள் காதலிக்க என்ன காரணம் தெரியுமா..?
13 புரட்டாசி 2024 வெள்ளி 14:20 | பார்வைகள் : 1158
ஒரு சில ஆண்களுக்கு குறிப்பிட்ட பெண்கள் மீது ஈர்ப்பு இருக்கும். அதில் ஒன்று தான் வயதான பெண்கள் மீது ஏற்படும் ஈர்ப்பு. குறிப்பாக, இளம் ஆண்கள் தங்களுக்கு சமமான வயதுடைய பெண்கள் அல்லது தங்களை விட வயது குறைவான பெண்களிடம் எதிர்பார்க்கும் சில விஷயங்களை, கொஞ்சம் மூத்த பெண்களிடம் காண முடிகிறது. சுதந்திரமாக செயல்படுவது, மெச்சூரிட்டி, சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் அலட்டிக் கொள்ளாமல் இருப்பது என்று பல காரணங்களுக்காக பல ஆண்கள் தங்களை விட வயதில் மூத்த பெண்களிடம் ஈர்க்கப்படுகிறார்கள்.
இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால், வயதான பெண்கள் கடினமான, சிக்கலான சூழலில் ஆண்களை சார்ந்து இருக்காமல் அல்லது ஆண்களின் உதவி கோராமல் எளிதாக சரி செய்து விடுவார்கள். ஆனால், எல்லா ஆண்களுக்குமே வயதில் கொஞ்சம் பெரிய பெண்ணிடம் ஈர்ப்பு வராது. இந்த குணங்கள் ஆண்களுக்கு இருந்தால், அவர்கள் அனைவரும் வயது வித்தியாசம் பார்க்காமல் மூத்த பெண்களிடம் காதலில் விழுவார்கள்!
மெச்சூரிட்டியாக இருக்கும் ஆண்கள்: மூத்த பெண்களிடம் ஆண்களுக்கு மிகவும் பிடித்த விஷயம் மெச்சூரிட்டி. அதே போல, மன முதிர்ச்சி அதிகம் இருப்பவர்கள் தான் மூத்தவர்களை விரும்புவார்கள். தங்கள் மனதில் நினைப்பதை எளிதாக வெளிப்படுத்துவது, வெளிப்படையான உரையாடுவது ஆகியவற்றில் கை தேர்ந்தவர்கள்.
தன்னம்பிக்கை அதிகமுள்ள ஆண்கள்: தன் மீதும், தன் திறமை மீதும் அதிகமாக தன்னம்பிக்கை கொண்டிருக்கும் ஆண்கள் தன்னை விட வயதான பெண்ணை காதலிப்பதை ஒரு பிரச்சனையாகவே கருதவே மாட்டார்கள். தன்னம்பிக்கையாக இருப்பவர்களுக்கு சாதாரணமாகவே வயதான பெண்களின் மீது கொஞ்சம் ஈர்ப்பு இருக்கும். தான் எப்படி இருந்தாலும், அதை மிகவும் சௌகரியமாக உணர்வார்கள், மற்றவர்களுக்காக மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற பதற்றம் இருக்காது, அந்த தன்னம்பிக்கையை அவர்கள் மற்றவர்களுக்கும் கொடுப்பார்கள்.
சுதந்திரமாக இருப்பது : வயதில் மூத்த பெண்களை விரும்பும் ஆண்களுக்கு சுதந்திரமாக இருப்பது மிகவும் பிடிக்கும்! தனக்கு பிடித்தவற்றை செய்வது, தேடல்கள், பயணங்கள், விருப்பங்கள் என்று சுதந்திரமாக இருப்பதை விரும்புவார்கள். தனிமையை விரும்பும் இவர்கள், மற்றவர்களுடன் ஜாலியாகப் பழகுவார்கள்; அதாவது எந்த இடமாக இருந்தாலும், சூழலாக இருந்தாலும் இவர்கள் பழக தயக்கம் இருக்காது. இந்த குணங்கள் தான், சுதந்திரமாக இருக்கும் மூத்த பெண்ணை நேசிக்கும் விருப்பத்தைத் தருகிறது.
வெளிப்படையான நபர்கள்: மூத்த பெண்களை விரும்பும் ஆண்கள் பெரும்பாலும் வெளிப்படையானவர்கள். புதிய அனுபவங்கள், புதிய கண்ணோட்டமென்று வாழ்க்கையை பல்வேறு கண்ணோட்டங்களில் வாழ விரும்புபவர்கள். மற்றவர்களிடமிருந்து கற்றுக் கொள்வதை தவறாகவோ தாழ்வாகவோ நினைக்கவே மாட்டார்கள். அது மட்டும் இல்லாமல், இப்படித்தான் இருக்க வேண்டும் என்று ஏற்கனவே உருவாக்கப்பட்ட ஒரு விஷயங்களை கண்மூடித்தனமாக நம்ப மாட்டார்கள். எதையுமே புரிதல் இல்லாமல் பின்பற்ற மாட்டார்கள். அதுமட்டும் இல்லாமல் பெண்களின் கண்ணோட்டத்தில் ஒரு விஷயத்தை சொல்லும் பொழுது அதை புரிந்து கொள்ள முயற்சிப்பார்கள்; அதற்கு மதிப்பும் மரியாதையும் அளிப்பார்கள்.
எமோஷனல் இன்டலிஜன்ஸ்: கடினமான உணர்வுகளையும், உறவுகளுக்குள் ஏற்படக்கூடிய சிக்கலான விஷயங்களையும் மூத்த பெண்களை விரும்பும் ஆண்களால் சுலபமாக ஹேண்டில் செய்து, சரியாக தீர்வு காண முடியும். அது மட்டும் இல்லாமல், மற்றவர்கள் சென்சிட்டிவாக உணரும் விஷயத்தையும், அவர்களின் தேவைகளையும் உணர்ச்சிகளையும் இவர்களால் புரிந்து கொண்டு அதற்கு ஏற்றார் போல நடக்க முடியும். கிரிட்டிகலாக எதையும் பார்க்காமல், பிறர் உணர்வுகளை புரிந்து கொண்டு நடப்பார்கள்.
பரஸ்பர மரியாதை: பொதுவாகவே எந்த உறவாக இருந்தாலும் அதில் பரஸ்பர அன்பும் மரியாதையும் இருக்க வேண்டும். வயதில் மூத்த பெண்களை விரும்பும் ஆண்கள் பரஸ்பரம் மரியாதை கொண்டிருப்பார்கள். இவர்கள் மற்றவர்களிடத்தில் மரியாதையாக நடப்பார்கள் மற்றவர்களையும் மரியாதையாக நடத்துவார்கள். எந்த பிரச்சினையாக இருந்தாலும் சட்டென்று முடிவுகளை எடுக்காமல், சிக்கல்களை சரியாகப் புரிந்துகொண்டு இருவருக்கும் எது சரியாக இருக்கும் என்று யோசித்து மெச்சூர்டாக முடிவு எடுப்பார்கள். கோபம், சண்டை என்று எதுவாக இருந்தாலுமே அதை சரி செய்வதில் முயற்சி செய்வார்கள்.