வக்கீல் சார்... என்னய எம் பொண்டாட்டிட்டருந்து காப்பாத்துங்க சார்... காப்பாத்துங்க...!!"
11 புரட்டாசி 2024 புதன் 09:44 | பார்வைகள் : 693
"ஏம்ப்பா... என்ன நடந்துச்சி...!"
"அத ஏன் கேக்குறீங்க வக்கீல் சார்,.. கடந்த நாலஞ்சு மாசா மாசம் ஒரு புக்க வாங்கிட்டு வந்து என்னய பாடா படுத்துறா...!"
"புக்கா... கொஞ்சம் வெளக்கமா சொல்லுங்க...!"
சொல்றேன் சார்... மொத மாசம் '30 நாட்களில் கராத்தே கற்றுக் கொள்வது எப்படி'ங்கிற புக்க வாங்கிட்டு வந்தா வாங்கிட்டு வந்து முப்பது நாளும் என் ஒடம்ப ரணகள மாக்கி கராத்தே கத்துகிட்டா நானும் நம்ம பொண்டாட்டி தானேன்னு தாங்கிக்கிட்டேன்..."
"இன்ட்ரஸ்ட்டிங்.."
"கேளுங்க வக்கீல் சார் ...அப்புறம் அடுத்த மாசம் '30 நாட்களில் வர்மக்கலை கற்றுக்கொள்வது எப்படி'ங்கிற புக்க வாங்கிட்டு வந்து முப்பது நாளும் என் ஒடம்புல கதகளி ஆடிட்டா... நானும் வலிக்காதது மாதிரியே தாங்கிட்டேன்..."
"ப்ச்... மூனாவது மாசம் என்ன புக் வாங்கிட்டு வந்தாங்க...!?"
"ஐய்யோ...'30 நாட்களில் தற்காப்பு கலையை கற்றுக் கொள்வது எப்படி'ங்கிற புக்கு சார்... முப்பது நாளும் கொரில்லா தாக்குதல் நடத்தி என்ன நிலைகுலைய வச்சிட்டா சார்..."
"பாவம் தான் நீங்க... அப்புறம் நாலாவது மாசம் என்ன புக்கு வாங்கிட்டு வந்தாங்க...!?"
'30 நாட்களில் சார்பட்டா பரம்பரையாவது எப்படி' ங்கிற புக்கு சார்... "முப்பது நாளும் முகம் வீங்காத நாளே இல்ல வக்கீல் சார்..."
"அப்புறம் அஞ்சாவது மாசம் என்ன புக்கு...!?"
"அதுதான் வக்கீல் சார் என் தன் நம்பிக்கையையே தகர்துடுச்சி... அஞ்சாவது மாசம் அவ வாங்கிட்டு வந்த புத்தகத்த பாத்து வெல வெலத்துப்போய் இனிமேலும் வீட்டல இருந்தா நம்ம உயிருக்கு ஆபத்துன்னு இங்கே ஓடியாந்துட்டேன் வக்கீல் சார்..."
"அவ்வளவு அதிரடியான புக்கா அது... அந்த புக்கு பேரென்ன...!?"
"30 நாட்களும் முப்பது விதமான உப்புமா செய்வதெப்படி" ங்கிற புக்கு வக்கீல் சார்...!"