ஒக்டோபர் 1 முதல்... 50 கி.மீ வேகத்துக்கு மட்டுப்படுத்தப்படும் périphérique..!!
9 புரட்டாசி 2024 திங்கள் 10:23 | பார்வைகள் : 3560
ஒக்டோபர் 1, செவ்வாய்க்கிழமை முதல் périphérique என அழைக்கப்படும் சுற்றுவட்ட வீதியின் வேகம் மணிக்கு 50 கி.மீ ஆக குறைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பரிஸ் நகர முதல்வர் ஆன் இதால்கோ இதனை இன்று தெரிவித்தார். “ஆமாம். 50 கி.மீ வேகம் என்பது என்னுடைய முடிவு. திட்டமிடப்பட்டது போன்று ஒக்டோபர் 1 ஆம் திகதியில் இருந்து நடைமுறைக்கு வரும்!” என ஆன் இதால்கோ திட்டவட்டமாக தெரிவித்தார்.
”2018 ஆம் ஆண்டில் இருந்து நாம் இதற்காக உழைத்து வருகிறோம். இது புதிய ஒரு சட்டம் இல்லை. இது தொடர்பில் நாம் பரிஸ் நகசபைக் கூட்டத்தில் வாக்குகள் எடுத்தோம்.” எனவும் ஆன் இதால்கோ தெரிவித்தார்.
சுற்றுவட்ட வீதியை சுற்றி 500,000 பேர் வசிக்கின்றனர். அவர்களை கருத்தில் கொண்டு இந்த திட்டம் நடைமுறைக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.