இயல்புக்கு திரும்பிய போக்குவரத்துக்கள்..!

9 புரட்டாசி 2024 திங்கள் 07:15 | பார்வைகள் : 11889
ஒலிம்பிக் போட்டிகளுக்காக பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்ட நிலையில், இன்று திங்கட்கிழமை முதல் அனைத்து போக்குவரத்து சேவைகளும் இயல்புக்கு திரும்பியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
*கட்டணங்கள் குறைப்பு!*
ஒலிம்பிக் போட்டிகளுக்காக €4 யூரோக்களுக்கு விற்பனை செய்யப்பட்ட மெற்றோ பயணச்சிட்டைகள் தற்போது மீண்டும் பழைய விலைக்கு திரும்பியுள்ளன. இன்று முதல் €2.15 யூரோக்களுக்கு பயணச்சிட்டைகள் விற்பனை செய்யப்படுகிறது.
*மெற்றோ நிலையங்கள் திறப்பு!*
Concorde நிலையம் கிட்டத்தட்ட ஒன்றரை மாதங்களின் பின்னர் இன்று திறக்கப்பட்டது.
Porte d'Issy முதல் Porte de Versailles வரை நிறுத்தப்பட்டிருந்த T2 ட்ராம் சேவை இன்று மீண்டும் ஆரம்பிம்பிக்கப்பட்டுள்ளன.
அதேவேளை, RATP மற்றும் SNCF இற்கு சொந்தமான நிலையங்களில் உதவிக்கு நின்றிருந்த நாவல்நிற மேலங்கி அணிந்த உதவியாளர்களை இன்று முதல் காணமுடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.