கட்டுநாயக்க விமானத்தில் தங்க பிஸ்கட்களுடன் ஒருவர் கைது
8 புரட்டாசி 2024 ஞாயிறு 09:54 | பார்வைகள் : 893
சுமார் மூன்று கோடி ரூபாய் பெறுமதியான தங்க பிஸ்கட்களை தனது கால் சட்டைப் பையில் மறைத்து வைத்து கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு முனையத்தில் காத்திருந்த விமானப் பயணி ஒருவரை விமான நிலைய குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
29 வயதான இவர் இந்தியாவிலிருந்து அடிக்கடி விமானத்தில் பயணம் செய்பவராவார்.
அவர் புறப்பாடு முனையத்தில் இருந்து, விமானப் பயணிகள் மையத்திற்குச் சென்று கொண்டிருந்த போது, குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் அவரது கால் சட்டைப் பையில் ஒரு சிறிய பையில் 01 கிலோ 158 கிராம் எடையுள்ள 09 தங்க பிஸ்கட்டுகளையும் மேலும் 03 தங்க பிஸ்கட்டுகளையும் மீட்டுள்ளனர். அதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அந்த நபரையும், அவரிடம் இருந்த தங்க பிஸ்கட்டுகளையும் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.