கார்த்தி - அரவிந்த் சாமியின் 'மெய்யழகன்' டிரைலர்..!
7 புரட்டாசி 2024 சனி 14:55 | பார்வைகள் : 880
கார்த்தி மற்றும் அரவிந்த்சாமி முக்கிய வேடத்தில் நடித்த ‘மெய்யழகன்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வரும் 27ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டீசர் சற்றுமுன் வெளியாகி இணையத்தின் வைரல் ஆகி வருகிறது.
ஒன்றரை நிமிடம் இருக்கும் இந்த டீசர் வீடியோவில் கார்த்தி மற்றும் அரவிந்த் சாமியின் ஜாலியான உரையாடல் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. குறிப்பாக ’அத்தான்.. பீர் அடிப்பீர்களா என கார்த்தி ஜாலியாக கேட்பதும், அதற்கு அரவிந்த்சாமி வேண்டாம் என்றும் சொல்வதுமான காட்சியும் உள்ளது.
கார்த்தி மற்றும் அரவிந்த்சாமி உறவினர்களாக நடித்திருக்கிறார்கள் என்பதும் படம் முழுவதும் ஒரு ஜாலியான குடும்ப கதையாக இருக்கும் என்றும் இந்த டீசரில் இருந்து தெரிய வருகிறது.
கார்த்தி, அரவிந்த்சாமி, ராஜ்கிரண், ஸ்ரீதிவ்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா நடித்த ’96’ படத்தை இயக்கிய பிரேம் குமார் இந்த படத்தை இயக்கி உள்ளார் என்பதும் சூர்யா ஜோதிகாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.