சிவகார்த்திகேயன் காட்சிகள் 'கோட்' படத்தில் நீக்கப்பட்டதா?
7 புரட்டாசி 2024 சனி 14:50 | பார்வைகள் : 1151
தளபதி விஜய் நடித்த 'கோட்’ திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு சில காட்சிகளில் தோன்றுவார் என்பதும் அந்த காட்சிகள் உள்ளர்த்தம் கொண்டவையாக இருக்கும் என்பதும் ஏற்கனவே படம் பார்த்தவர்களுக்கு தெரிந்திருக்கும். இந்த நிலையில் இன்னும் சில சிவகார்த்திகேயன் காட்சிகள் இருந்ததாகவும் ஆனால் படத்தின் நீளம் கருதி நீக்கிவிட்டதாகவும் சமீபத்தில் பேட்டி அளித்த இயக்குனர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.
தளபதி விஜய் நடிப்பில் உருவான 'கோட்’ திரைப்படம் நேற்று முன்தினம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்று வருகிறது என்பதும் முதல் நாளே இந்த படம் ரூ.126 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை செய்துள்ளது என்பது தெரிந்தது.
இந்த நிலையில் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் தோன்றும் காட்சி அசத்தலாக உள்ளது என்பதும் இந்த காட்சியில் ’துப்பாக்கிய பிடிங்க, நிறைய பேரோட உயிர் உங்க கையில இருக்கு’ என்று சொல்லும் போது விஜய் தனது இடத்தை சிவகார்த்திகேயனுக்கு விட்டுக் கொடுப்பது இருக்கும். சிவகார்த்திகேயனும் ’நீங்கள் இதைவிட முக்கிய இடத்துக்கு போவது பற்றி பேசும் காட்சியும் இருக்கும்.
இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி அளித்த இயக்குனர் வெங்கட் பிரபு இன்னும் சில சிவகார்த்திகேயன், மோகன் காட்சிகள் இருந்ததாகவும், அதுவும் சுவாரசியமான காட்சிகள் என்றும், ஆனால் படத்தின் நீளம் கருதி நீக்கி விட்டோம் என்று கூறிய அவர் விரைவில் நீக்கப்பட்ட காட்சிகளை வெளியிடுவோம் என்றும் தெரிவித்துள்ளார். அந்த காட்சிகள் என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.