Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் திடீரென தீப்பிடித்து எரிந்த வாகனங்கள்

இலங்கையில் திடீரென தீப்பிடித்து எரிந்த வாகனங்கள்

7 புரட்டாசி 2024 சனி 13:02 | பார்வைகள் : 934


பாதுக்கை மஹிங்கல,  பகுதியில் உள்ள வீடொன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கெப் வண்டி மற்றும் முச்சக்கர வண்டியும் திடீரென தீப்பிடித்து எரிந்து நாசமாகியுள்ளன.

ஹொரணை மாநகரசபை தீயணைப்பு பிரிவினர் சென்ற போதிலும் வாகனங்கள் இரண்டும் ஏற்கனவே தீப்பிடித்து எரிந்தே காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஏலத் தோட்டத்தில் அமைந்துள்ள இந்த நிலத்துக்குள் யாரும் நுழைய முடியாது என்றும் கூறப்படுகிறது.

எவ்வாறாயினும், இந்த வாகனங்களுக்கு யாராவது தீ வைத்தனரா அல்லது ஒரு வாகனம் தீப்பிடித்ததால் மற்றைய வாகனமும் தீப்பிடித்து எரிந்ததா? என்பது தொடர்பில் இதுவரை தெரியவரவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்