Paristamil Navigation Paristamil advert login

Aulnay-sous-Bois : துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயம்..!!

Aulnay-sous-Bois : துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயம்..!!

7 புரட்டாசி 2024 சனி 12:30 | பார்வைகள் : 1492


Aulnay-sous-Bois (Seine-Saint-Denis) நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளனர். 

இன்று செப்டம்பர் 7 ஆம் திகதி சனிக்கிழமை காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. அங்குள்ள பிரபலமான Allée du Professeur-Monod பகுதியில் தனது காதலியுடன் நின்றிருந்த 33 வயதுடைய ஒருவரை, ஆயுததாரி ஒருவர் துப்பாக்கியால் சுட்டுள்ளார். அதை அடுத்து குறித்த நபர் தப்பி ஓடியுள்ளார்.

தப்பி ஓடிய நபரை பின்னால் துரத்திச் சென்று துப்பாக்கியால் சுட்டுள்ளார். படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

மொத்தமாக நான்கு தடவைகள் துப்பாக்கியால் சுடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Rue du Dr-Fleming வீதியில் இடம்பெற்ற இச்சம்பவத்தை அடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்