Paristamil Navigation Paristamil advert login

உக்ரைனுக்கு 650 ஏவுகணைகளை வழங்கிய  பிரித்தானியா

உக்ரைனுக்கு 650 ஏவுகணைகளை வழங்கிய  பிரித்தானியா

7 புரட்டாசி 2024 சனி 08:53 | பார்வைகள் : 1556


உக்ரைன் நாட்டுக்கு பிரித்தானியா 650 ஏவுகணைகள் கொண்ட ஒரு தொகுப்பை அனுப்பவுள்ளது.

ஜேர்மனிக்கு வருகைதர இருக்கும் உள்துறை செயலாளர் ஜான் ஹீலி, உக்ரைனின் பாதுகாப்பிற்காக பிரித்தானிய அரசு 650 ஏவுகணைகள் (Lightweight Multirole Missile) அனுப்ப உள்ளதாக அறிவிக்கவுள்ளார்.

இது, உக்ரைனின் போராட்டத்திற்கு பிரித்தானியா வழங்கும் புதிய நிதி உதவியாகும்.

உக்ரைன் பாதுகாப்பு தொடர்பு குழு நாட்டு பாதுகாப்பு அமைச்சர்கள் கலந்து கொள்ளும் உச்சிமாநாடு ஜேர்மனியில் உள்ள ராம்ஸ்டைன் நகரில் அமெரிக்க விமானப்படை தளத்தில் நடைபெறவுள்ளது.

இந்த புதிய உதவி, உக்ரைனின் விமானப்படைக்கு பாதுகாப்பை வலுப்படுத்துவதோடு, பிரதமர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கியின் நாட்டிற்கு புதிய பிரித்தானிய அரசின் ஆதரவை உறுதிப்படுத்தும் என்று கூறியுள்ளார் ஹீலி.


"உக்ரைன் மக்களை, உட்கட்டமைப்புகளை, மற்றும் நிலத்தை ரஷ்ய தாக்குதல்களிலிருந்து பாதுகாக்க, இங்கிலாந்து தயாரித்த இந்த ஏவுகணைகள் உதவியாக இருக்கும்" எனவும் அவர் கூறினார்.

உக்ரைனின் பாதுகாப்பு உத்தியை மேம்படுத்தவும், ஐரோப்பியாவின் பாதுகாப்புக்கு உக்ரைனின் முக்கியத்துவத்தை வலியுறுத்தவும் இந்த உதவிகள் முக்கியமாக அமையும் எனவும் அவர் கூறியுள்ளார்.

உக்ரைன் போரில் கடந்த சில மாதங்களில், ரஷ்ய படைகள் மிகுந்த அழுத்தங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்தத் தீர்மானம் அவர்களுக்கு தேவையான ஆதரவை அளிக்கிறது.


நேட்டோ மற்றும் ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு தொடர்ந்தும் ஆதரவு அளித்துக் கொண்டிருக்க, இந்த புதிய பாதுகாப்பு உதவி தொகுப்பு, உக்ரைனின் போராட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கலாம்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்