இன்றும் தொடரும் சீரற்ற காலநிலை.. ஐந்து மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!
7 புரட்டாசி 2024 சனி 08:02 | பார்வைகள் : 1213
நேற்று மாலை முதல் நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் சீரற்ற காலநிலை நிலவிவருகிறது. இன்று சனிக்கிழமை காலை மீண்டும் அங்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மழை மற்றும் வெள்ளம் காரணமாக இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு மாவட்டங்களாக Hautes-Pyrénées, Dordogne, Corrèze, Creuse மற்றும் Haute-Vienne ஆகிய மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை (vigilance orange) விடுக்கப்பட்டுள்ளது.
Landes மற்றும் Pyrénées-Atlantiques மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த எச்சரிக்கை தளர்த்தப்பட்டுள்ளது.
அதேவேளை, இன்று சனிக்கிழமை நாட்டின் பெரும்பான்மையான நகரங்களில் மழை பெய்யும் எனவும், தலைநகர் பரிஸ் உட்பட இல் து பிரான்ஸ் மாகாணத்திலும் மழை பெய்யும் எனவும், மஞ்சள் நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.