ஒரே நாளில் ஆங்கிலக்கால்வாயைக் கடந்த 973 அகதிகள்..! - நால்வர் பலி!!
6 ஐப்பசி 2024 ஞாயிறு 15:03 | பார்வைகள் : 3145
முன்னர் எப்போதும் இல்லாத அளவில், ஒரே நாளில் 973 அகதிகள் பிரான்சில் இருந்து பிரித்தானியா நோக்கி படையெடுத்துள்ளனர். ஒக்டோபர் 5, நேற்று சனிக்கிழமை இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இரண்டு வயது குழந்தை உட்பட நால்வர் பலியாகியுள்ளனர்.
பிரித்தானிய அரசு இத்தகவலை வெளியிட்டுள்ளது. முன்னதாக கடந்த ஜூன் மாதத்தில் ஒரே நாளில் 882 அகதிகள் கடலைக் கடந்தது தான் முந்தைய அதிகபட்ச பதிவாக இருந்த நிலையில், நேற்று அந்த எண்ணிக்கை முறியடிக்கப்பட்டது.
முன்னர் எந்த வருடங்களிலும் இல்லாத அளவு இவ்வருடம் அதிகளவான அகதிகள் பிரித்தானியா நோக்கி படையெடுத்து வருகின்றனர். இவ்வருட ஆரம்பம் முதல் இதுவரை 26,612 அகதிகள் ஆங்கிலக்கால்வாயை கடந்து பிரித்தானியா நோக்கி பயணித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.