சிறைத்தண்டனைகளில் மாற்றம் விரும்பும் பிரெஞ்சு மக்கள்!
6 ஐப்பசி 2024 ஞாயிறு 15:00 | பார்வைகள் : 13549
சிறைத்தண்டனை வழங்குவதில் ஒரு மாற்றத்தைக் கொண்டுவர விரும்புவதாக கடந்த வாரம் பிரதமர் Michel Barnier அறிவித்திருந்தார். குறைந்த கால சிறைந்தண்டனை என்றாலும் அது முறையான சிறைத்தண்டனையாக இருக்க வேண்டும் என அவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவரது கருத்துக்கு பொதுமக்களில் பெரும்பாலானோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
சிறைத்தண்டனை வழங்கப்பட்டவர்கள் குறித்த காலத்துக்கு முன்பாகவே விடுதலை செய்யப்படுவதும், அல்லது நிபந்தனைகளின் பேரில் விடுதலை செய்யப்படுவதும், சிறைத்தண்டனையை பிற்போடுவதும் என பல்வேறு சூழ்நிலைகள் காணப்படுகிறது. அவை அனைத்தும் சீரமைக்கப்படும் என பிரதமர் தெரிவித்திருந்தார். இந்நிலையில், பொது மக்களில் 67% சதவீதமானவர்கள் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
CNews, Europe 1 மற்றும் JDD ஆகிய ஊடகங்களுக்காக sondage CSA எனும் நிறுவனம் மேற்கொண்டிருந்த கருத்துக்கணிப்பில் இது தெரியவந்துள்ளது. சிறிய தண்டனைக்காலம் என்றாலும் அதனை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan