Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் புதிய அரசியலமைப்பு - ஜனாதிபதி அறிவிப்பு

இலங்கையில் புதிய அரசியலமைப்பு - ஜனாதிபதி அறிவிப்பு

5 ஐப்பசி 2024 சனி 16:28 | பார்வைகள் : 1926


புதிய அரசியலமைப்பொன்று கொண்டுவரப்பட வேண்டும் என்பதே தமது நோக்கமாகும் என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். 

 
ஜனாதிபதி இன்று வெள்ளவத்தையில் உள்ள அமரபுர பீடத்தின் தேரர்களிடம் ஆசி பெற்றதன் பின்னர், அவர்களிடம் இதனைத் தெரிவித்துள்ளார். 
 
நீண்ட கலந்துரையாடல்கள் மற்றும் பொதுமக்கள் வாக்கெடுப்பினூடாக மாத்திரமே தாம் அதனை செய்ய எதிர்பார்த்திருப்பதாகவும், அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார். 
 
கடந்த அரசாங்கங்கள் அரசியலமைப்பு திருத்தங்களை தமது தேவைகளுக்கு ஏற்பவே செய்துகொண்டதாகவும், மக்களின் தேவைக்கு ஏற்ப திருத்தங்கள் செய்யப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 
 
எவ்வாறாயினும் நாட்டை ஓரளவு ஸ்திரப்படுத்தி மக்கள் எதிர்பார்ப்புக்கு அமைய, புதிய அரசியலமைப்பொன்றைக் கொண்டுவருவதற்குத் தாம் எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்