பாகிஸ்தான் அணியின் புதிய கேப்டன் யார்...?
3 ஐப்பசி 2024 வியாழன் 08:52 | பார்வைகள் : 742
பாபர் அசாம் கேப்டன் பதவியை ராஜினாமா செய்ததையடுத்து, பாகிஸ்தான் அணியின் புதிய கேப்டன் யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தான் ஒருநாள் மற்றும் டி20 அணியின் புதிய கேப்டனாக முகமது ரிஸ்வான் நியமிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
பாகிஸ்தான் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் பாபர் அசாம் தனது ஒருநாள் மற்றும் டி20 கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியுள்ளார்.
பாபர் அசாம் கேப்டன் பதவியை ராஜினாமா செய்வது இது இரண்டாவது முறையாகும். விளையாட்டில் கவனம் செலுத்த விரும்புவதாகக் கூறுகிறார்.
இந்நிலையில் PCB ஒரு புதிய கேப்டன் பதவியைத் தேடி வருகிறது. விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் முகமது ரிஸ்வானுக்கு ஒருநாள் மற்றும் அணியின் கேப்டன் பொறுப்பு வழங்கப்பட வாய்ப்புள்ளது.
இந்த தகவலை பாகிஸ்தான் செய்தி சேனலான ஜியோ நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
ரிஸ்வான் இதுவரை பாகிஸ்தான் அணிக்காக 74 ஒருநாள் போட்டிகள் மற்றும் 102 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
ஒருநாள் போட்டிகளில் 2,088 ஓட்டங்கள் மற்றும் டி20 போட்டிகளில் 3,313 ஓட்டங்களை குவித்துள்ளார்.
ஆனால், பாபரை ராஜினாமா செய்யுமாறு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கேட்கவில்லை என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.