கடலில் மூழ்குமா அணுமின் நிலையம்..??
3 ஐப்பசி 2024 வியாழன் 06:17 | பார்வைகள் : 3501
பிரான்சின் வடக்கு பிராந்தியமான Gravelines (Nord) இல் உள்ள அணுமின் நிலையம் ஒன்று கடலில் மூழ்கும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
காலநிலை மாற்றம் காரணமாக 2100 ஆம் ஆண்டில் வடக்கு கடலில் இராட்சத அலைகள் தோன்றும் எனவும், அங்கு அமைக்கப்பட்டுள்ள அணுமின் நிலையம் நீரில் அடித்துச் செல்லப்படவோ, அல்லது மின்சார உற்பத்தி பாதிப்படையவோ செய்யும் என Greenpeace எனும் தன்னார்வ சமூக தொண்டு நிறுவனம் எச்சரித்துள்ளது.
தற்போது இருக்கும் சராசரி வெப்பத்தை விட அங்கு 2100 ஆம் ஆண்டில் +4°C வெப்பம் அதிகமாக பதிவாகும் எனவும், அதன் காரணமாக கடலில் பல மாற்றங்களை சந்திக்கும் எனவும் அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்படுள்ளது.
அதேவேளை, கடல்நீர்மட்டம் 2100 ஆம் ஆண்டில் இரண்டு மீற்றர் அதிகரிக்கும் எனவும், 2150 ஆம் ஆண்டில் அது ஐந்து மீற்றராக அதிகரிக்கும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.