Paristamil Navigation Paristamil advert login

நோய்களின் முதல் அறிகுறி உடல்வலி ... அலட்சியம் வேண்டாம்

நோய்களின் முதல் அறிகுறி உடல்வலி ... அலட்சியம் வேண்டாம்

2 ஐப்பசி 2024 புதன் 14:35 | பார்வைகள் : 1777


காய்ச்சல் வருவதற்கு முன்பும், வந்த பிறகும் கடுமையான உடல் வலியை உணர்கிறோம். அதாவது உடலில் கிருமிகள் தாக்கும்போது அதை வெளிப்படுத்துவதுதான் காய்ச்சல். காய்ச்சலின் போது கிருமிகளை எதிர்த்துப் போராட உடல் வெப்பமாகும்.

கிருமிகள் அழிக்கப்படுவதற்காக தான் நமது உடல் வெப்பமடைவதாக அறிவியல் கூறுகிறது .  இந்தக் கிருமிகளின் வாழ்நாள் குறைவாக இருந்தாலும், அவை குறுகிய நேரத்தில் பல மடங்கு பெருகும் தன்மையுடையது. இப்படி கிருமிகள் பல மடங்கு பெருகுவதால் அவற்றை அழிக்க உடல் அதிகமாக வெப்பமாகும். இவ்வாறு , உடல் வெப்பமாகும் நிலையை காய்ச்சல் என்கிறோம்.

இப்படி உடல் வெப்பமாகும்போது லேக்டிக் என்ற அமிலம் சுரக்கும். இந்த 'லேக்டிக்' அமிலம் சுரப்பது தான் தசைவலிக்குக் காரணம் . அதேபோன்று, அனைத்து வகையான உடல்வலியையும் சாதாரண காய்ச்சல் என்று எடுத்துக் கொள்ள வேண்டாம். உதாரணமாக ,  தொற்றுநோய் தாக்குதல் போதும்  உடல் வலி ஏற்படும் என்று மருத்துவ தரவுகள் தெரிவிக்கின்றன. அதேபோன்று,  நீரிழிவு நோய் இருந்தாலும் அடி வயிறு மற்றும் கால்களில் வலி ஏற்படும்.

தொடர்ச்சியான உடல்வலிகள் புற்றுநோய்க்கான ஆரம்பகட்ட அறிகுறியாக  இருக்கலாம் என்று சமீபத்திய மருத்துவ தகவல்கள் தெரிவிக்கின்றன.  புற்றுநோய் செல்கள் உடலில் பரவுவதால் இந்த கடுமையான வலி உண்டாகும் என்றும் கூறப்படுகிறது. டெங்கு காய்ச்சல் இருந்தால் மூட்டு வலி, தசை வலி மற்றும் தலைவலி உண்டாகும். தொடர்ச்சியாக நாம்புகள் மற்றும் தசைகளில் காயங்கள் ஏற்பட்டால் உடல் வலி ஏற்படும்.

உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் எய்ட்ஸ் இருந்தாலும் உடல் வலி ஏற்படும். எனவே, காய்ச்சல்தான் வலிக்கான காரணம் என அலட்சியப் படுத்தாமல், வலிகளுக்கான காரணங்களை முறையாக தகுந்த அறிந்து மருத்துவர் மூலம் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். எனவே, தொடர்ந்து காயச்சல், உடல்வலி இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது என்கிறார்கள் மருத்துவர்கள்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்