இஸ்ரேல்-ஈரான் முறுகல் நிலை.. பிரதமர் நெத்தன்யாஹுவை தொலைபேசியில் அழைத்த மக்ரோன்..!
8 ஆவணி 2024 வியாழன் 07:00 | பார்வைகள் : 2279
இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. இரு நாடுகளும் இராணுவ விரிவாக்கலை ஆரம்பித்துள்ளது. மத்திய கிழக்கு முழுவதும் பெரும் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ள நிலையில், ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் இஸ்ரேலிய பிரதமர் நெத்தன்யஹுவை (Benjamin Netanyahu) தொலைபேசியில் அழைத்து உரையாடியுள்ளார்.
நேற்று ஓகஸ்ட் 7 ஆம் திகதி புதன்கிழமை மாலை இந்த உரையாடல் இடம்பெற்றது. "மக்கள் தொகையையும் அப்பிராந்தியங்களின் ஸ்ரிதத்தன்மையையும் ஆபத்தில் ஆழ்த்தும் இந்த நடவடிக்கைகளை தவிர்க்குமாறும், பழிவாக்கும் எண்ணத்தை கைவிடும்படியும் ஈரானிய ஜனாதிபதிக்கு அழைப்பு விடுத்தது போலவே இஸ்ரேலிய பிரதமரிடமும் அதனைக் வலியுறுத்தினார். இது அனைத்து தரப்பினருக்கும் பொதுவான பிராந்தியம்" என நேற்று மாலை எலிசே மாளிகை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
"இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையிலான போர் முழு பிராந்தியத்திற்கும் அழிவுகரமான விளைவுகளை ஏற்படுத்தும்." எனவும் ஜனாதிபதி மக்ரோன் தெரிவித்ததாக அறிய முடிகிறது.