நீதிமன்றவளாகத்தில் துப்பாக்கிச் சூடு!!
6 ஆவணி 2024 செவ்வாய் 22:44 | பார்வைகள் : 2713
முலூஸ் (Mulhouse - Haut-Rhin) நீதிமன்றம் அருகில் துப்பாக்கிச் சூடு நடைபெற்றுள்ளது.
சிற்றுந்துருளியில் (Scooter) வந்த இருவர் மீது, சிற்றுந்தில் வந்த இருவர் கடுமையாக துப்பாக்கிப் பிரயோகம் செய்துள்ளனர். இதில் ஒருவர் கொல்லப்பட, மற்றையவர், சிற்றுந்தின் கீழ் படுகாயத்துடன் மீட்கப்பட்டுள்ளனர்.
சிற்றுந்துருளியை செலுத்திவந்த 30 வயதுடையவர், முலூஸ் வைத்திய சாலையில் சாவடைந்துள்ளார். அவருடன வந்த 27 வயதுடையவர் உடனடியாக சத்திரசிகிச்சைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.
துப்பாக்கிப் பிரயோகம் செய்து, கொலை செய்த இரு சகோதரர்கள், சிற்றுந்தை நீதிமன்றம் அருகில் விட்டு விட்டுத் தப்பியோடி உள்ளனர்.
இருவரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொலை செய்தவர்கள் மீதும், கொலை செய்யப்பட்டவர்கள் மீதும், போதைப்பொருள் கடத்தல் வழக்கு, மற்றும் பல குற்றவியல் வழக்கும் உள்ளது எனவும், காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.