ஷேக் ஹசீனாவின் தந்தை முஜிபுர் ரஹ்மானின் சிலையில் சிறுநீர் கழித்த போராட்டக்காரர்கள்
6 ஆவணி 2024 செவ்வாய் 15:34 | பார்வைகள் : 1482
வங்காளதேசத்தில் உள்நாட்டு கலவரம் ஏற்பட்டுள்ளது.
ஆட்சி மாற்றமும் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கலவரம் காரணமாக பிரதமர் பதவியிலிருந்து விலகிய ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சம் அடைந்தார்.
இதனையடுத்து, ஷேக் ஹசீனா மாளிக்கைக்குள் சென்ற போராட்டக்காரர்கள் தற்காலிக கூடாரத்திற்கு தீ வைத்தனர்.
மாளிகையில் உள்ள சமையல் அறைக்கு சென்று சமைத்து வைத்த உணவுகளை ருசி பார்த்தனர். அங்கிருந்து படுக்கையில் படுத்து போட்டோ எடுத்துக் கொண்டனர். சிலர் ஷேக் ஹசீனா வரைந்து வைத்திருந்த போட்டோக்கள், அவருடைய சேலைகள் கண்ணில் பட்டதையெல்லாம் கொள்ளைடியத்தனர்.
பெரும்பாலான போராட்டக்காரர்கள் மாளிகை வளாகத்தில் வளர்க்கப்பட்ட வாத்து, முயல், கோழி போன்றவற்றை பிடித்துச் சென்றனர்.
ஷேக் ஹசீனாவின் தந்தையும் வங்கதேசத்தின் முதல் அதிபருமான ஷேக் முஜிபுர் ரஹ்மானின் சிலையை போராட்டக்காரர்கள் உடைக்கும் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில், ஷேக் முஜிபுர் ரஹ்மானின் சிலையின் தலை மீது ஏறி போராட்டக்காரர் ஒருவர் சிறுநீர் கழிக்கும் வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வங்கதேசத்தின் தந்தை என போற்றப்படும் ஷேக் முஜிபுர் ரஹ்மானுக்கு இறுதியில் இப்படிப்பட்ட ஒரு நிலை ஏற்பட்டுள்ளது.