விக்ரம்- 2 படத்தில் நடிப்பதற்கு கமல்ஹாசன் தயாராகி வருகிறாரா?
6 ஆவணி 2024 செவ்வாய் 14:31 | பார்வைகள் : 668
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த விக்ரம் படம் அவருக்கு ஒரு கம்பேக் படமாக அமைந்தது. ஆனால் அதையடுத்து பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியன் 2 படம் வெற்றி பெறவில்லை. தற்போது மணிரத்னம் இயக்கி வரும் தக்லைப் படத்தில் நடித்து வரும் கமல், இதையடுத்து ஸ்டண்ட் மாஸ்டர்கள் அன்பறிவ் இயக்கும் படத்தில் நடிக்கப் போகிறார். இந்த நிலையில் தற்போது கூலிங் கிளாஸ் தொப்பி அணிந்தபடி ஒரு சிறுவனுடன் தான் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார் கமல்.
விக்ரம் படத்தின் கிளைமாக்ஸ் சீனில் தனது பேரனாக நடித்த சிறுவன் போலவே இந்த புகைப்படம் இருப்பதால், விக்ரம்- 2 படத்தில் நடிப்பதற்கு கமல்ஹாசன் தயாராகி வருகிறாரா..., அதை வெளிப்படுத்தவே இந்த போட்டோவை பதிவிட்டுள்ளார் என்று பலரும் கருத்து கூறி வருகிறார்கள்.